×

ஓசூரில் பகுதி வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

ஓசூர், செப்.14: ஓசூர் மாநகர மேற்கு பகுதி வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அவைத்தலைவர் சூர்யநாராயணன் தலைமை வகித்தார். வட்ட செயலாளர் வடிவேல் வரவேற்று தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில், மாநகர மேற்கு பகுதி செயலாளரும், மாநகர துணை மேயருமான ஆனந்தய்யா கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் மேற்கு பகுதி அவை தலைவர் கருணாநிதி, மண்டல குழு தலைவர் ரவி, பகுதி மற்றும் வட்ட நிர்வாகிகள் சுரேஷ், ஜோசுவா, ரகு, சாகர், துரை, கணேஷ், ரமேஷ், சீனிவாசன், சுந்தராம்மாள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் கலைவாணன், மனோமுரளி, அண்ணாதுரை, சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திமுக பிரமுகர் கணேஷ் நன்றி கூறினார்.

The post ஓசூரில் பகுதி வட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : District DMK ,Hosur ,West District DMK ,Suryanarayan ,Vadivel ,Municipal West Region ,
× RELATED இலவச இ-சேவை மையம் திறப்பு