போச்சம்பள்ளி, செப்.13: போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், எந்த வருடமும் இல்லாத அளவிற்கு கோடைக்கு முன்பே வெயில் கொளுத்துகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால், விவசாய பணிகள் தீவிரமடைந்தது. இந்நிலையில், மழை குறைந்து, கடந்த 10 போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில், வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள், அதிகம் வெளியில் வராமல் வீடுகளில் முடங்கினர். மேலும், பகல் வேளையில் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடியது.
The post கொளுத்தும் வெயிலால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.