ரஷ்யா நடத்தும் உக்ரைன் போருக்கு வீரர்களே கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இன்னும் நிலைமை மோசமாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாட்டு மக்களை அதிக எண்ணிக்கையில் குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அரசே அதிகாரப்பூர்வமாக வேண்டுகோள் விடுத்து வருகிறது.
காதல் செய்யுங்கள்!
அந்நாட்டு அதிபர் புடின், ஒரு படி மேலே சென்று, நாட்டு மக்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அதிபர் புடின் கூறியதாவது: உக்ரைனுடன் நடந்து வரும் போரின் காரணமாக நாட்டின் மக்கள் தொகை குறைந்துள்ளது. இது தேசத்தின் எதிர்காலத்திற்கு பேரழிவு. வேலையில் மிகவும் பிஸியாக இருப்பது சரியான காரணம் அல்ல. குழந்தை பிறப்புக்கு வேலை ஒரு தடையாக இருக்கக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் மதிய உணவு மற்றும் காபி இடைவெளியின் போது என நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரஷ்யாவில், 2023 ஜன., 1 நிலவரப்படி, 14.64 கோடி மக்கள் தொகை உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவின் தற்போதைய கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு தோராயமாக 1.5 குழந்தைகளாக உள்ளது. இது மக்கள்தொகை நிலைத்தன்மைக்கு தேவையான 2.1 க்கும் குறைவாக உள்ளது.
The post நேரம் கிடைக்கும் போதெல்லாம் காதல் செய்யுங்கள்: ரஷ்யா அதிபர் புதின் வலியுறுத்தல் appeared first on Dinakaran.