நடிகை அதிதி ராவுடன் நடிகர் சித்தார்த் திருமணம்

சென்னை: நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் ஹைதரி திருமணம் சென்னையில் இன்று காலை நடைபெற்றது. கடைசியாக ‘இந்தியன் 2’ படத்தில் நடித்திருந்தார் சித்தார்த். இவர் ஏற்கனவே திருமணமாகி, மனைவியை பிரிந்தவர். தமிழில் ‘காற்று வெளியிடை’, ‘செக்க சிவந்த வானம்’ படங்களில் நடித்தவர் பாலிவுட் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இவரும் திருமணமாகி, கணவரை விவாகரத்து செய்திருந்தார். சித்தார்த், அதிதி ராவ் இணைந்து ‘மகா சமுத்திரம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தனர்.

அப்போது இவர்களிடையே காதல் மலர்ந்தது. கடந்த சில ஆண்டுகளாக லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். சில மாதத்துக்கு முன் அதிதிக்கு மோதிரம் அணிவித்து நிச்சயதார்த்தம் செய்துகொண்டார் சித்தார்த். இந்நிலையில் இன்று காலை சென்னை புறநகரிலுள்ள ஒரு கோயிலில் இவர்களின் திருமணம் எளிமையாக நடந்தது. இதில் இரு வீட்டாரும், சித்தார்த்துக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரும் மட்டுமே பங்கேற்றனர்.

 

The post நடிகை அதிதி ராவுடன் நடிகர் சித்தார்த் திருமணம் appeared first on Dinakaran.

Related Stories: