கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு எம்எல்ஏவை இந்த கும்பல் இதேபோல ஏமாற்ற முயன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் அன்வர் சாதத். இவரது மகள் டெல்லியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவருக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் வந்தது.
அதில் பேசிய ஒரு நபர், தான் சிபிஐ அதிகாரி என்றும், உங்களது மகளை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றால் உடனடியாக தங்களது வங்கிக் கணக்குக்கு ரூ.50 லட்சம் பணம் அனுப்ப வேண்டும் என்று அந்த நபர் கூறினார். அதிர்ச்சியடைந்த அன்வர் சாதத் எம்எல்ஏ உடனடியாக டெல்லியிலுள்ள மகளை தொடர்பு கொண்டார். அப்போது எதிர்முனையில் பேசிய அவரது மகள் தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கூறினார். இதையடுத்து எம்எல்ஏ அன்வர் சாதத் எர்ணாகுளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post போதைப்பொருள் வழக்கில் மகளை கைது செய்துள்ளதாக கூறி கேரள எம்எல்ஏவிடம் ரூ.50 லட்சம் பேரம்: சிபிஐ போல் நடித்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை appeared first on Dinakaran.