முதலமைச்சர் கோப்பை விளையாட்டு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நிறைவு

 

மதுரை, செப். 14: மதுரை மாவட்ட அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில், பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரைப்பிரிவு சார்பில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் செப்.10ம் தேதி துவங்கியது. இப்போட்டிகள் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்று வருகிறது.

இதில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து, ஹாக்கி, சிலம்பம், நீச்சல், கபடி போட்டிகள் ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும், தடகள போட்டிகள் ஆயுதப்படை மைதானத்திலும் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கான நீச்சல், சிலம்பம், கூடைப்பந்து, கபடி, கைப்பந்து, ஹாக்கி மற்றும் தடகளம் ஆகிய அனைத்து போட்டிகளுடன் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான கைப்பந்து போட்டியை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா துவக்கி வைத்தனர்.

மாணவர்கள் பிரிவில் தனபால் மேல்நிலைப்பள்ளி அணி முதல் இடமும், ரயில்வே பள்ளி அணி இரண்டாம் இடமும் பெற்றன. மாணவிகள் பிரிவில் ரயில்வே பள்ளி அணி முதலிடமும், நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி அணி 2ம் இடமும், செயின்ட் ஜான்ஸ் பள்ளி 3ம் இடமும் பெற்றன. இந்த அணிகளை ஹேண்ட் பால் சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைவர் கண்ணன், நிர்வாகிகள் சந்திரசேகரன் மற்றும் பயிற்சியாளர் குமரேசன் ஆகியோர் பாராட்டினர்.

The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: