மாவட்டத்தில் 15 ஆயிரம்பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்: வினாத்தாளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

 

திருப்பூர்,செப்.14:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பில் குரூப் 2 பதவிக்கு 507 பணியிடங்களும்,குரூப் 2 ஏ பணிக்கு 1820 பணியிடங்களும் என மொத்தம் 2327 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு மூலம் தொழிலாளர் உதவி ஆய்வாளர்,துணை வணிக வரி அலுவலர் மற்றும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர்,உதவிப்பிரிவு அலுவலர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 15,433 பேர் குரூப் 2 தேர்வை எழுத உள்ளார்கள்.

திருப்பூர் வடக்கு மற்றும் தெற்குஇ தாராபுரம் ஆகிய 3 தாலுகா பகுதிகளில் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வினாத்தாள்கள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் உள்ள அறையில் வைக்கப்பட்டுள்ளது.இந்த அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று தேர்வு நடைபெற உள்ள நிலையில் தாலுகா பகுதிக்கு வினாத்தாள்கள் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன. திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட தேர்வு மையங்களுக்கு மாவட்ட கருவூலத்தில் இருந்து வினாத்தாள்கள் கொண்டு செல்லப்படுகின்றன.

The post மாவட்டத்தில் 15 ஆயிரம்பேர் குரூப் 2 தேர்வு எழுதுகின்றனர்: வினாத்தாளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Related Stories: