சென்னை : தமிழ்நாட்டில் 5 இடங்களில் நேற்று 100 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கோடைக்காலத்தை போல வெயில் வாட்டி வதைத்து வருகிறது.ஒரு சில இடங்களில் மழை பெய்தாலும், பல இடங்களில் வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது.