ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு

 

உடுமலை, செப். 13: உடுமலை தளி சாலையில் ரயில்வே சுரங்கப் பாதை உள்ளது. ராமசாமி நகர் ரயில்வே கேட் அடிக்கடி மூடும் போது இந்த பாதையைத்தான் அதிக அளவு பயன்படுத்துவது வழக்கம்.வலது புறம் காந்தி சதுக்கம் தளி ரோடு,மறுமுனை இடதுபுறம் ஒன்றிய அலுவலகம் போடிபட்டி கிராமப்புறங்களுக்கு செல்லுவதற்காக இந்தப் பாதையை அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சுரங்கப்பாதையில் அடிக்கடி போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.

மேம்பாலம் அருகே தாலுகா அலுவலகம்,டிஎஸ்பி அலுவலகம், நகராட்சி அலுவலகம், பெண்கள் மேல்நிலைப் பள்ளி,ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் செல்லும் பாதை உள்ளது. இந்த சுரங்கப்பாதையில் உயரம் அதிகமான வாகனங்கள் சென்று சிக்கிக் கொள்கின்றன. இதனால் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் நிற்கின்றன. உள்ளே சென்ற வாகனங்கள் செல்லவும் முடியாமல், திரும்பவும் முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்போது போக்குவரத்து போலீசாருக்கு தகவல் சொன்னால் வருவதில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளி நேரங்களில் போக்குவரத்து தடைபடும் போது மாணவ, மாணவிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, போக்குவரத்து போலீசார் வாகன போக்குவரத்தை சீரமைக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ரயில்வே சுரங்கப்பாதையின் கீழ் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: