தமிழகத்தில் தொழில் முதலீடுகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.உச்சநீதிமன்ற ஆணைப்படி தமிழகத்தில் கல்வி, வேலை வாய்ப்பில் 20 சதவீதம் உள்ஒதுக்கீடு செய்ய ஆய்வு செய்து அறிக்கை வெளியிட பிற்படுத்தப்பட்ட ஆணையத்துக்கு அரசு ஆணையிட்டு 20 மாதங்கள் முடிந்தும் ஆணையம் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. நெல் கொள்முதல் நிலைய ஊழல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்திற்கு கல்விநிதியை மத்திய அரசு ஒதுக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும். இதனை சரி செய்ய அமைச்சர் குழுவை டெல்லிக்கு அனுப்பி கல்வி நிதியை வழங்க வலியுறுத்த வேண்டும். உடல்நலத்திற்கு கேடு என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தடை செய்யப்பட்ட சீனா பூண்டுகள் விற்பனையை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும், என்றார்.
The post ஐ.டி நடவடிக்கையால் கடன் பெற முடியாமல் விவசாயிகள் பாதிப்பு: ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.