அப்போது அங்கு வந்த ஆசிரியையின் கணவர் வீட்டின் உள்ளே பார்த்துள்ளார். அப்போது வாலிபருடன் தனது மனைவி உல்லாசமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். ஆத்திரம் அடைந்த ஆசிரியையின் கணவர் சத்தம்போட்டுள்ளார். இதனால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு கூடினர். கள்ளக்காதல் ஜோடி வெளியே வந்தனர். ஆத்திரம் அடைந்த ஆசிரியையின் கணவர், மனைவியை தாக்கினார். இந்த நேரத்தில அந்த வாலிபர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
இது தொடர்பாக ஆசிரியைக்கும், அவரது கணவருக்கும் மறுநாள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. கணவர் ஆசிரியையை தாக்கியுள்ளார். இதில் ஆசிரியை படுகாயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற ஆசிரியை வீடு திரும்பினார். இந்த விஷயத்தை கள்ளக்காதலனிடம் கூறியுள்ளார். அவரை பார்ப்பதற்காக அந்த வாலிபர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வெளியே சென்று இருந்த ஆசிரியையின் கணவர் வீட்டிற்கு வந்துள்ளார்.
மனைவி கள்ளக்காதலனுடன் பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த அவர் மேலும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக தாக்கினார். இந்த கள்ளக்காதல் விவகாரம் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்திற்கு சென்றது. போலீசார் ஆசிரியை, அவரது கணவர், கள்ளக்காதலன் ஆகியோரை அழைத்து பேசினர்.
ஆசிரியை கள்ளக்காதலுடன் தான் செல்வேன் என போலீசாரிடம் தெரிவித்தார். போலீசார் ஆசிரியைக்கு பல்வேறு அறிவுரைகள் கூறினர். ஆனால் போலீசாரின் அறிவுரையை ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. கணவர் தொடர்ந்து தன்னை தாக்கிவருவதாக போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவருடன் நான் வாழமுடியாது கள்ளக்காதலனுடன் தான் செல்வேன் என பிடிவாதமாக இருந்தார். பின்னர் போலீசார் ஆசிரியைக்கு அறிவுரை வழங்கி கணவருடன் அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு எற்பட்டது.
The post காதலனுடன் ஆசிரியை உல்லாசம் நேரில் பார்த்த கணவர் தர்மஅடி: போலீஸ் ஸ்டேஷனில் பஞ்சாயத்து appeared first on Dinakaran.