பிச்சிவிளையில் உள்ள திருமண மண்டபத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இங்கு நேற்று காலை முதல் அவரது உடலுக்கு வணிகர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், வணிகர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நேற்று மாலை 3:30 மணி அளவில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் இந்து முறைப்படி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
The post வெள்ளையன் உடல் அடக்கம்: அமைச்சர்கள் அஞ்சலி appeared first on Dinakaran.