செய்தித்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி, தமிழக முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நிரந்தர பணியாளர்கள் நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தாலுகா அளவில் பணியாற்றும் செய்தியாளர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டு உள்ளேன். உரிய நேரத்தில் முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று முடிவுகள் எடுக்கப்படும்.
திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக தனியாக தொலைபேசி எண் உள்ளது. எந்த நேரத்திலும் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். அதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக வங்கக்கடலில் விதிமுறைக்கு உட்பட்டுத்தான் பேனா சின்னம் அமைக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.
The post திரைத்துறையில் பாலியல் துன்புறுத்தல்; தொலைபேசியில் புகார் அளிக்கலாம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.