நாகப்பட்டினத்தில் நாளை கூட்டுறவு பணியாளர் குறைதீர்நாள் நிகழ்ச்சி

நாகப்பட்டினம், செப்.12: தமிழ்நாடு கூட்டுறவுதுறை அமைச்சர் அறிவிப்பின்படி கூட்டுறவு சங்கங்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், துறை அலுவலர்கள் மற்றும் நிர்வாகத்திற்கு இடையே இணக்கமான சூழலை உருவாக்க வேண்டும். பணி தொடர்பாகவும், பணியின்போதும் அல்லது வேறு வகையிலும் ஏற்படும் குறைகளை பகிரவும், அந்தக்குறைகளை விதிகளுக்கு உட்பட்டு தீர்வு செய்யும் வகையிலும் 2 மாதத்துக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளர் நாள் நிகழ்ச்சி நடத்த கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரால் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி நாகப்பட்டினம் மண்டலத்தில் நாளை (13.9.2024) முற்பகல் 10.30 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை நாகப்பட்டினம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் அறை எண்303 மூன்றாம் தளம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் நாகப்பட்டினம். என்ற முகவரியில் பணியாளர் குறைதீர்க்கும் நாள் நடைபெற உள்ளது. குறைகள் உள்ள கூட்டுறவுச் சங்க பணியாளர்கள் நேரில் வந்து தங்கள் குறைகளை தெரிவித்துக்கொள்ளலாம் என்று நாகப்பட்டினம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணபை்பதிவாளர் தயாளவிநாயகன் அமுல்ராஜ் (முழு கூடுதல் பொறுப்பு) தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினத்தில் நாளை கூட்டுறவு பணியாளர் குறைதீர்நாள் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: