நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

நாகப்பட்டினம், செப்.12: நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நேற்று நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜோதிமணி அம்மாள் துவக்கி வைத்தார். காரைக்கால் துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி ராகவேந்திர ராவ் ஜகிர்தார் கலந்துகொண்டு மாணவர்களுக்கு அவர்களது எதிர்காலம் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார். கல்வி குழுமத்தின் இணைச் செயலர் சங்கர் கணேஷ் முன்னிலை வகித்தனர். முதன்மை செயல் அலுவலர் முனைவர் சந்திரசேகர், தேர்வு நெறியாளர் முனைவர் சின்னதுரை, நிர்வாகத் தலைவர் முனைவர் மணிகண்ட குமரன், கல்விசார் இயக்குனர் முனைவர் பழனிமுருகன், முதன்மையர் முனைவர் மணிகண்டன், மாணவர் சேர்க்கை பிரிவின் தலைவர் ஹரி நாராயணன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முதலாம் ஆண்டு துறை தலைவர் முனைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்வில் 950 மேற்பட்ட மாணவ, மாணவிகள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர்.

ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி மண்டல கோ கோ போட்டியில் 2ம் இடம்: நாகை-புதுச்சேரி மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையான கோ கோ விளையாட்டு போட்டியில் ஏழுமலையான் பாலிடெக்னிக் கல்லூரி கொல்லுமாங்குடி மாணவர்கள் இரண்டாம் இடம் வென்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் ஜீவானந்தம் ஆகியோரை, கல்லூரி சேர்மன் ரவி, வைஸ் சேர்மன் ராக்கவ் தினேஷ், தாளாளர் தேவகி, இயக்குனர்கள் காவிய பிரியா , மதுமதி, கல்லூரி மேலாளர் துரை சரவணன், துணை முதல்வர் சுமதி, துறை தலைவர்கள், விரிவுரையாளர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பலரும் பாராட்டினர்.

The post நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: