ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரதமர் அல்பானீஸ் அதிரடி

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை விதிக்க ஆஸ்திரேலிய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறும்போது, “செல்போன் பயன்பாடு, சமூக ஊடகங்கள் மூலம் இளைஞர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு ஆளாவது கொடூரம். இதனால் குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் செல்போன் உள்ளிட்ட சாதனங்களில் இருந்து விலகி விளையாட்டு மைதானங்கள், நீச்சல் குளங்களில் இருப்பதை காண விரும்புகிறேன். குழந்தைகள் உண்மையான மனிதர்களுடன் நேரடியான அனுபவங்களை பெற வேண்டும். எனவே குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கும் சட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார். எந்த வயது குழந்தைகளுக்கு தடை விதிப்பது என்பது குறித்து வயது சரி பார்ப்பு சோதனை விரைவில் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

The post ஆஸ்திரேலியாவில் குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை: பிரதமர் அல்பானீஸ் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: