தேசிய மருத்துவப் பதிவேட்டில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் பதிவு செய்ய வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு

சென்னை: தேசிய மருத்துவ ஆணையம் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ள கடிதம்: இந்தியாவில் பதிவு செய்ய தகுதியுள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களையும் பதிவு செய்வதற்கான தேசிய மருத்துவ பதிவேடு (என்எம்ஆர்) இணையதளத்தை ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் பராமரிக்கிறது. இந்தியாவில் உள்ள அனைத்து அலோபதி (MBBS) பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களுக்கும் என்எம்ஆர் ஒரு விரிவான வெளிப்படையான தரவுத்தளமாக இருக்கும். என்எம்ஆரின் தனித்தன்மை என்னவென்றால், இது மருத்துவர்களின் ஆதார் ஐடியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது தனிநபரின் நம்பகத்தன்மையை உறுதி செய்கிறது. ஏற்கனவே இந்திய மருத்துவப் பதிவேட்டில் (ஐஎம்ஆர்) பதிவு செய்துள்ள அனைத்து எம்பிபிஎஸ் மருத்துவர்களும் என்எம்சியின் என்எம்ஆரில் மீண்டும் பதிவு செய்ய வேண்டும்.

The post தேசிய மருத்துவப் பதிவேட்டில் எம்பிபிஎஸ் மருத்துவர்கள் பதிவு செய்ய வேண்டும்: தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: