புதுக்கோட்டையில் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி

 

புதுக்கோட்டை, செப்.3: சுய வேலை வாய்ப்பு வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி மற்றும் வங்கி கடன் வசதி பெறுதல் திட்ட அறிக்கை தயாரித்தல் மத்திய மாநில அரசு திட்ட டங்கள் குறித்து வரும் 18ம் தேதி முதல் ஒரு மாதம் அரசு பல்கலைகழக சான்றிதழுடன் நடைபெற உள்ளது. வரும் 6ம்தேதிக்குள் முன்பதிவு செய்தால் மட்டுமே பயிற்சியில் கலந்து கொள்ள முடியும். வயது வரம்பு கிடையாது. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்திலும் இருந்தும் பங்கு பெறலாம். பயிற்சியின் சிறப்புகள் வணிக ரீதியாக வெண்பன்றி விற்பனை வாய்ப்பு நோய் மேலாண்மை உத்திகள் புதிய பண்ணை அமைக்க அரசு மற்றும் தனியார் வெண்பன்றி பண்ணை பார்வையிடல் கல்வி சுற்றுலா பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

வங்கி அதிகாரியுடன் கலந்துரையாடல் வெண்பன்றி வளர்ப்பு கையேடு பயிற்சிக்கு அணுகவும். டாக்டர் பூ புவரஜன் பேராசிரியர் மற்றும் தலைவர் கால்நடை மருத்துவ பல்கலைக் கழக மண்டல ஆராய்ச்சி மற்றும் கல்வி மையம் அண்டகுளம் ரோடு புதுக்கோட்டை தொடர்பு கொண்டு பயனடையலாம். கலெக்டர் வழங்கினார் டாப்செட்கோ நீர்பாசன கடன் திட்டத்தின் கீழ் வங்கியின் மூலம் ரூ.1,00,000 கடன் தொகை பெற்று, புதிதாக ஆழ்துறை கிணறு அமைத்து சொத்து உருவாக்கப்பட்ட 14 நபர்களுக்கு டாப்செட்கோ மேலாண்மை இயக்குநர் அவர்களிடமிருந்து ரூ.7 லட்சம் மானியத் தொகை விடுக்கப்பட்டுள்ளது.

The post புதுக்கோட்டையில் வெண்பன்றி வளர்ப்பு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: