ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தாயார் திருவுருவப் படம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

திருவள்ளூர்: பூந்தமல்லி எம்எல்ஏ வும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணைச் செயலாளருமான ஆ.கிருஷ்ணசாமி மற்றும் ஆ.வில்வமணி ஆகியோரது தாயார் ஆ.நாகபூஷணம் வயது முதிர்வு காரணமாக காலமானார்.  அன்னாரது 16 ம் நாள் நினைவஞ்சலி மற்றும் திருவுருவப் படத்திறப்பு விழா அம்பத்தூரில் நடைபெற்றது. விழாவிற்கு பால்வளத்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்து கொண்டு ஆ.நாகபூஷணத்தின் திருவுருவப் படத்தை திறந்து வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பிறகு தூய்மை பணியாளர்களுக்கும், ஏழை, எளியவர்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி, எம்எல்ஏக்கள் கும்மிடிப்பூண்டி டி.ஜே.கோவிந்தராஜன், அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், மதுரவாயல் க.கணபதி, மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம்.பூபதி, திண்டுக்கல் ஐ.லியோனி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார். அதேபோல்  சி.ஜெரால்டு,  கே.திராவிட பக்தன், ஆர்டிஇ.ஆதிசேஷன், அயப்பாக்கம் துரை வீரமணி, பூவை எம்.ஜெயக்குமார், டி.தேசிங்கு, கூளூர் எம்.ராஜேந்திரன், ஆர்.ஜெயசீலன், புஜ்ஜி டி.ராமகிருஷ்ணன், பூவை எம்.ரவிக்குமார், ச.மகாலிங்கம், தி.வே.முனுசாமி, தங்கம் முரளி, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் கே.ஜே.ரமேஷ், ம.ராஜி, எஸ்.ஜெயபாலன், தொழுவூர் பா.நரேஷ்குமார், த.எத்திராஜ், வி.ஜே.சீனிவாசன், வி.சிங்காரம், ஆர்.எஸ்.ராஜராஜன், கு.சேகர், எம்.குமார், ஜி.விமல் வர்ஷன், ஜெ.மாகதேவன், ஒன்றிய குழு துணைத் தலைவர்கள் எம்.பர்கத்துல்லா கான், பரமேஸ்வரி கந்தன் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்….

The post ஆ.கிருஷ்ணசாமி எம்எல்ஏ தாயார் திருவுருவப் படம்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: