காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 

நீடாமங்கலம், செப். 1:சத்துணவு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ஜீவிதா தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் அமுதா முன்னிலை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ராஜா, அரசு ஊழியர் சங்கம் ராஜ்குமார், மாவட்ட துணை தலைவர் அரசு ஊழியர் சங்கம் ராமமூர்த்தி விளக்க உரையாற்றினர். சத்துணவு ஊழியர் சங்க மாநில செயலாளர் லதா நிறைவுறை ஆற்றினார்.

இதில் சத்துணவு மையங்களில் 59 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தேர்தல் கால வாக்குறுதிகளான சத்துணவு ஊழியர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் அகவிலைப்படிவுடன் வழங்கவேண்டும், சத்துணவு ஊழியர்கள் பணி ஓய்வு பெறுகின்ற காலங்களில் அவர்களுக்கு ஒட்டுமொத்த தொகையாக ரூ.5 லட்சம் வழங்கிவேண்டும்.

காலை உணவு திட்டத்தை அனைத்து சத்துணவு மையங்களிலும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும்.  சத்துணவு உண்ணும் மாணவர்களின் வருகையை குறுஞ்செய்தி மூலம் சத்துணவு ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துவதை தவிர்க்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. நிறைவாக அரசு ஊழியர் சங்க வட்டார பொருளாளர் ஜெய்சித்ரா நன்றி கூறினார்.

The post காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: