ஜனாதிபதி விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா

தஞ்சாவூர், ஆக. 30: டெல்லியில் ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற ரக்ஷபந்தன் நிகழ்வில் இந்தியக் குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு தமிழ் நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு மாணவ-மாணவிகளில் தஞ்சாவூர் மாவட்டம், ஆதனக்கோட்டை, அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு பயிலும் மாணவி சந்தியா தேர்வாகி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.

19.08.2024 இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ சந்தித்து ரக்ஷ பந்தன் வாழ்த்துக் பெற்று திரும்பிய மாணவிக்கு பள்ளி வளாகத்தில் பள்ளியின் தலைமையாசிரியர் தர்மராஜ் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவில் ஆசிரியர் பாதுஷாராணி வரவேற்றார். ஊராட்சி மன்றத் தலைவர் ரெங்கராசு, பெற்றோர் ஆசிரியகழகத் தலைவர் தங்கராசு மற்றும் ஆசிரியர்களும்.ஞானமீனா, விஜயகுமார். கலைச்செல்வி, பழனிக்குமார்,லீலாவதி,.இளமதி வாழ்த்துரை வழங்கி மாணவிக்கு சிறப்பு செய்தனர். ஆசிரியர் குமார் நன்றி கூறினார்

The post ஜனாதிபதி விழாவில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: