தொண்டி, ஆக.30: தொண்டி அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய இடவசதி இல்லாததால், மாணவ, மாணவியர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதனால் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலும் 400 மாணவ,மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு வகுப்பறை நான்கு மட்டுமே உள்ளது.
அதனால் கணினி அறை, ஆய்வகம், தலைமை ஆசிரியர் அறை என அனைத்து இடங்களிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்கின்றனர். இடநெருக்கடியால் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இருப்பதால் கூடுதல் வகுப்பறை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மை குழு தலைவி பாண்டிச் செல்வி கூறியது, மாவட்டத்தில் அதிகமான மாணவர்கள் படிக்கும் பள்ளி இதுவாகும். ஆனால் இங்கு போதிய கட்டிட வசதி இல்லை. தற்போது பள்ளி வளாகத்தில் இருந்த கட்டிடங்கள் அகற்றப்பட்டதால், போதிய இடவசதி இருப்பதால் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.