தமிழ்நாடு முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நியமனம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கேடரில் புதிதாக தேர்வான 12 ஐபிஎஸ் அதிகாரிகளை உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பணி நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு உள்துறை செயலாளர் தீரஜ் குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அதிகாரிகளாக தேர்வான 12 ஐபிஎஸ் அதிகாரிகள் ஓராண்டு பயிற்சிக்கு பிறகு தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎஸ் அதிகாரியான அனிகெட் அசோக் பாத்ரே சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உதவி எஸ்பியாகவும், ரவிந்தர குமார் குப்தா விழுப்புரம் உதவி எஸ்பியாகவும், ஆகாஷ் ஜோஷி நாமக்கல் உதவி எஸ்பியாகவும், அன்சுல் நாகர் மதுரை மாவட்டம் திருமங்கலம் உதவி எஸ்பியாகவும்,

லலிதா குமார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உதவி எஸ்பியாகவும், மதன் தூத்துக்குடி உதவி எஸ்பியாகவும், மதிவாணன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உதவி எஸ்பியாகவும், சதீஷ்குமார் திருவண்ணாமலை உதவி எஸ்பியாகவும், ஷர்தீ சிங் கோவை மாவட்டம் பொள்ளாட்சி உதவி எஸ்பியாகவும், விகு எல் அச்சுமி தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி எஸ்பியாகவும், அக்‌ஷயா அனில் வாக்ரே கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உதவி எஸ்பியாகவும், கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்திரா தேனி உதவி எஸ்பியாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post தமிழ்நாடு முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி நியமனம்: உள்துறை செயலாளர் தீரஜ்குமார் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: