வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம்

 

சாயல்குடி, ஆக.28: முதுகுளத்தூரில் இருந்து கடலாடி செல்லும் சாலையோரம் உள்ள கூட்டுறவு நிலவள வங்கி பகுதியில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். முதுகுளத்தூர் பேரூராட்சி அலுவலகம் அமைந்திருக்கும் தெருக்களில் இருந்து ஓடி வரும் மொத்த சாக்கடையும் செல்லும் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் பகுதி அடைக்கப்பட்டிருப்பதால் இப்பகுதியில் உள்ள நிலவள வங்கி முன்பு ஒரு குட்டை போன்ற பள்ளம் தோண்டப்பட்டு அதில் தேக்கப்பட்டு, அது நிரம்பி கிடக்கிறது.

சிறு மழை பெய்தாலும் கூட திறந்த வெளியாக சாலையில் பெருக்கெடுத்து ஓடி தேங்கி கிடக்கிறது. மேலும் துர்நாற்றத்தால் தேங்கிய பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருக்க சிரமமாக உள்ளது. கூட்டுறவு நிலவள வங்கி வரும் வாடிக்கையாளர்களும் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. சில நேரங்களில் சாக்கடை நிறைந்து சாலையோரங்களில் பெருக்கெடுத்து ஓடி, சாயல்குடி, முதுகுளத்தூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. சாக்கடை குட்டை ஆழமாக இருப்பதால் குழந்தைகள் விளையாடும் போதும், கால்நடைகளும் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே நிரந்தரமாக சாக்கடையை வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வீடுகளை சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: