டெல்லியில் உள்ள வங்கதேச தூதர்களை, இடைக்கால அரசு திரும்பப் பெற்றது. டாக்காவில் இருக்கும் இந்திய தூதரகத்தில் தங்களுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் எனக்கூறி, மாணவர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இவ்வாறாக அடுத்தடுத்த போராட்டங்கள் பட்டியலில், ‘ஹிஜாப்’ உடை அணியாமல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்,பேராசிரியர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். சுமார் 100 ‘ஹிஜாப்’ எதிர்ப்பு ஆசிரியர்களின் பட்டியலை அவர்கள் வெளியிட்டுள்ளனர். டாக்கா பல்கலைக்கழகம் உட்பட முக்கிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் கல்வியாளர்களும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டம்: ‘ஹிஜாப்’ எதிர்ப்பு ஆசிரியர்களுக்கு சிக்கல் appeared first on Dinakaran.