மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் மதுரை கல்லூரி அணி முதலிடம்

திண்டுக்கல், ஆக. 26:திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் ஹாக்கி போட்டி நேற்று தனியார் கல்லூரியில் நடைபெற்றது.  போட்டியை, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா துவக்கி வைத்தார். இதில் திண்டுக்கல் , மதுரை, கோயம்புத்தூர், பாண்டிச்சேரி, சென்னை, தர்மபுரி, தஞ்சாவூர், தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 18 அணிகள் கலந்து கொண்டன. போட்டிகள் நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றது.

இதில் லீக் போட்டிக்கு, மதுரை அருளானந்தர் கல்லூரி, திண்டுக்கல் ஜி.டி.என். கல்லூரி, கோவை மாருதி கல்லூரி, தர்மபுரி ஹாக்கி யூனிட் அணி ஆகியவை தகுதி பெற்றன. இதில் முதலிடம் பிடித்த மதுரை அருளானந்தர் கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை ரூ.10 ஆயிரம், 2ம் இடம் பிடித்த தர்மபுரி ஹாக்கி யூனிட் அணிக்கு கோப்பை மற்றும் ரூ.7 ஆயிரம், 3ம் இடம் பிடித்த கோவை மாருதி கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ. 5 ஆயிரம், 4ம் இடம் பிடித்த ஜி.டி.என். கல்லூரி அணிக்கு கோப்பை மற்றும் ரூ 3 ஆயிரம் பெற்றனர்.

பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, மாவட்ட ஹாக்கி சங்கத் தலைவர் நாட்டாமை காஜா மைதீன் தலைமை வகித்து வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஹாக்கி சங்க துணைத் தலைவர்கள் ரமேஷ் பட்டேல், சுவாமிநாதன், உடற்கல்வி இயக்குனர் ராஜசேகர், மாவட்ட ஹாக்கி சங்க செயலாளர் ராமனுஜம், சமூக ஆர்வலர் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் மதுரை கல்லூரி அணி முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: