இதுதொடர்பான தொழிலாளர் நலத்துறை முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்போது, ஆக.27ம் தேதி ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழுவின் கூட்டுநர், தொழிற்சங்கங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை, ஆக.27ம் தேதி காலை 11 மணிக்கு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குரோம்பேட்டை பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தின் சார்பாக ஒரு பிரதிநிதி மட்டும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளும் பிரிதிநிதி தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையுடன் வர வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
The post 15வது ஊதிய ஒப்பந்தம் போக்குவரத்து தொழிலாளர்களுடன் வரும் 27ம் தேதி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.