இதை தொடர்ந்து, அமைச்சர் சாமிநாதன் அலுவலர்களிடம் பேசியதாவது: அகரமுதலி இயக்கக அகராதிகளை கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு பொது நூலகங்கள் வழியாக மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை மும்முரப்படுத்த வேண்டும். கல்லூரி கல்வி இயக்ககம் வழியாக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அகரமுதலி இயக்கக அகராதிகளை வழங்குவதற்கும், அரசால் நடத்தப்பெறும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பயிற்சி மையங்கள், அண்ணா மேலாண்மை பயிற்சி மையம் போன்ற இடங்களிலும் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
அகரமுதலி இயக்கக தமிழ் கலைக்கழகத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களின் எண்ணிக்கையை 5லிருந்து 10 ஆக உயர்த்தி அதன் செயற்பாடுகளை புத்தாக்கம் செய்ய வேண்டும். காலத்திற்கேற்ற வகையில் மேம்படுத்தப்பட்ட ஆங்கிலம் – தமிழ் அகராதி, தற்கால தமிழ் அகராதி ஆகியவற்றை உருவாக்கி வெளியிடவும், வருங்காலங்களில் இயக்கக வெளியீடுகள் அனைத்திலும் விரைவு துலங்கல் குறியீடு இடம்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழில் உள்ள 70 விழுக்காடு சொற்களுக்கு வேர்ச்சொல் கண்டறியப்பட்டுள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் அப்பணியை 100 விழுக்காடு நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post அதிகாரிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் அறிவுறுத்தல் அகரமுதலி இயக்கக அகராதிகளை மாணவர்களிடம் சேர்க்க வேண்டும் appeared first on Dinakaran.