போடி, ஆக. 23: பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டை அமுல்படுத்த கோரியும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், தேனி மாவட்டம், போடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் கட்சியினர் நடைப்பயணம் சென்றனர். நிகழ்ச்சிக்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கிருஷ்ணவேணி சக்திவேல் தலைமை வகித்தார். முன்னதாக போடி காமராஜர் சாலையில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் காமராஜர் சாலை வழியாக தேவர் சிலை, பெரியாண்டவர் ஹைரோடு, வ.உ.சி சிலை உள்ளிட்ட பகுதிகள் ஊர்வலமாக சென்றது.
இதில் பங்கேற்றவர்கள் பெண்களுக்கு 33 சதவீதத்தை அமல்படுத்த வலியுறுத்தியும், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தியும் முழக்கமிட்டபடி சென்றனர். இதில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முருகேசன், தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி சையத் அசீனா, மாவட்ட துணைத்தலைவர் சன்னாசி, நகர தலைவர் முசாக் மந்திரி, போடி வட்டார காங்கிரஸ் தலைவர் ஜம்பு சுதாகர் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
The post போடியில் மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கோரி நடைப்பயணம் appeared first on Dinakaran.