250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திண்டிவனம் சிப்காட் உணவு பூங்காவில் டாபர் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், டாபர் இந்தியா லிமிடெட் நிறுவனம், திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030ம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற தமிழ்நாடு முதல்வரின் இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, அதிக அளவிலான முதலீடுகள் மேற்கொள்ளப்படக்கூடிய உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில்களையும், பெருமளவிலான வேலைவாய்ப்புகளை அளிக்கக்கூடிய தொழில்களையும் ஈர்த்திட பல்வேறு முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வீட்டு பராமரிப்பு , தனிப்பட்ட பராமரிப்பு மற்றும் பழச்சாறுப் பொருட்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்யும் டாபர் இந்தியா நிறுவனம், தென்னிந்தியாவிலேயே முதன் முறையாக, தமிழ்நாட்டில் திண்டிவனம், சிப்காட் உணவுப் பூங்காவில் 400 கோடி முதலீட்டில் 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் உலகத் தரம் வாய்ந்த உற்பத்தி ஆலையை நிறுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

The post 250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் திண்டிவனம் சிப்காட் உணவு பூங்காவில் டாபர் நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Related Stories: