நாகர்கோவில் மாநகராட்சியில் ₹18 லட்சத்தில் சாலை பணிகள்

நாகர்கோவில், ஆக.22: நாகர்கோவில் மாநகராட்சியில் ₹18 லட்சத்தில் சாலை பணிகளை மேயர் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 49வது வார்டு விக்னேஷ்வரா நகரில் ₹5 லட்சம், 36வது வார்டு டிவிடி காலனி 3வது குறுக்குத் தெருவில் ₹5 லட்சம், 20வது வார்டு ஞானம் காலனி 2வது தெருவில் ₹8 லட்சம் மதிப்பீடு என ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளை நேற்று காலை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில், துணைமேயர் மேரி பிரின்சி லதா, கவுன்சிலர்கள் சரலூர் ரமேஷ், ஆன்றோனைட் சினைடா, ஜெயவிக்ரமன், தொழில் நுட்ப அலுவலர் ரவி, மாநகர செயலாளர் ஆனந்த், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், பகுதி செயலாளர்கள் ஜீவா, சேக் மீரான், சிதம்பரம், லிங்கேஸ், முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்ற சாலையில் புதிய கழிப்பறை
நாகர்கோவில் நீதிமன்ற சாலையில் இயற்கை உபாதைகளை கழிக்க இடமின்மையால் பொது கழிப்பறை கட்ட பொதுமக்கள் மேயர் மகேஷிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்து டதி பள்ளி எதிரே கார் பார்க்கிங் அருகே கழிப்பறை கட்டி தரப்படும் என மேயர் மகேஷ் உறுதியளித்திருந்தார். இதன்படி, தலா ₹30 லட்சம் மதிப்பீட்டில் நீதிமன்ற சாலையிலும், வடசேரி ஆம்னி பஸ் நிலையத்திலும் இலவச கழிப்பறை கட்ட நேற்று காலை மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணைமேயர் மேரி பிரின்சி லதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நாகர்கோவில் மாநகராட்சியில் ₹18 லட்சத்தில் சாலை பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: