காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு: திரளான பக்தர்கள் தரிசனம்

தா.பழூர்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் கரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இங்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் காலத்தில் கட்டப்பட்ட சௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுக்கு இருமுறை சூரிய பகவான் ஈசனை சுற்றி வந்து வழிபட்டதாக ஐதீகம்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை லிங்கத்தின் மேல் சூரிய ஒளி படும் அபூர்வ நிகழ்வு நடைபெறும். அதன்படி இன்று காலை 6.10 மணிக்கு சூரியன் உதயமானது. அப்போது சூரியனிலிருந்து வெளிப்பட்ட ஒளிக்கதிரானது நேரிடையாக லிங்கத்தின் மீது பட்டு லிங்கம் பொன்னொளியில் ஒளிர்ந்தது. இந்த நிகழ்வானது சுமார் 10 நிமிடம் வரை நீடித்தது.

இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் காலை முதலே கோயிலுக்கு வந்து காத்திருந்து தரிசனம் செய்தனர். இந்த அபூர்வ நிகழ்வானது இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே நிகழும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

The post காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மேல் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Related Stories: