வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்கள் ஒட்டு மொத்தமாக பலி: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவல்

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளனர் என கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் கடந்தமாத இறுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் முண்டகை, சூரல்மலை, மேம்பாடி, அட்டமலை, புஞ்சிரிமட்டம், வெள்ளரிமலை உள்ளிட்ட இடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மண்ணுக்குள் புதைந்தன.

அது மட்டுமின்றி மண்ணுக்குள் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் நூற்றுக்கணக்கானவர்கள் பலியாகினர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளனர் என கேரள முதலமைச்சர் பினரயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்; நிலச்சரிவில் சிக்கியவர்களில் 119 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஒட்டு மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த 59 பேரில் குடும்பங்களுக்கு தலா 6 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 691 குடும்பங்களுக்கு அவசர நிதி உதவியாக 10,000, மற்றும் 172 பேரின் இறுதி சடங்கிற்கு 10,000 ரூபாய் வீதம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

The post வயநாடு நிலச்சரிவில் 17 குடும்பங்கள் ஒட்டு மொத்தமாக பலி: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அதிர்ச்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: