சேவுகம்பட்டி பேரூராட்சியில் ரூ.2.03 கோடி மதிப்பில் சாலை பணிகள் துவக்கம்

பட்டிவீரன்பட்டி, ஆக. 20: பட்டிவீரன்பட்டி அருகே சேவுகம்பட்டி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 11வது வார்டு குறிஞ்சி நகர், கண்ணன் நகர், 14வது வார்டு பிருந்தாவன் கார்டன், சவுபாக்யா நகர், திருநகர் கோவில்பட்டி ரோடு, 8வது வார்டு முத்துலாபுரம், 1வது வார்டு பகுதிகளில் ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்தல், 11வது வார்டு சவுபாக்யா நகர், 13வது வார்டு நாகலாபுரம், 14வது வார்டு கொன்னம்பட்டி சுப்பிரமணியபுரம் தெருக்களில் ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை என மொத்தம் ரூ.2 கோடியே 3 லட்சம் மதிப்பீலான பணிகள் துவங்குவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

பேரூராட்சி தலைவர் வனிதா தங்கராஜன் தலைமை வகித்து சாலை பணிகளை துவங்கி வைத்தார். இதில் துணை தலைவர் தெய்வராணி விஜயன், நகர செயலாளர் தங்கராஜன், செயல் அலுவலர் ரமேஷ்பாபு, இளநிலை பொறியாளர் கருப்பையா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ‘மழை காலங்களில் இப்பகுதி சாலைகள் சேறு, சகதியுமாக மாறி விடும். இதனால் பள்ளி- கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமமடைந்து வந்தனர். இதற்கு தீர்வாக தற்போது தார் சாலை, பேவர்பிளாக் சாலை அமைப்பதற்கு உத்தரவிட்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்’ என்றனர்.

The post சேவுகம்பட்டி பேரூராட்சியில் ரூ.2.03 கோடி மதிப்பில் சாலை பணிகள் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: