அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், மனுதாரர் அப்துல் மஜீத்தின் சொத்துகள் அவரின் மூதாதையரின் சொத்துகளாகும். இதை பரிசீலிக்காமல் ஒன்றிய அரசு கடத்தல் மற்றும் அன்னிய செலாவணி சட்டத்தின்கீழ் (சபேமா) அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடத்தல் மற்றும் அன்னிய செலாவணி மோசடி சட்டத்தின்கீழ் மனுதாரர்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரி அனுப்பிய நோட்டீசுக்கு உரிய முறையில் மனுதாரர்கள் பதில் தரவில்லை.
அவர்களின் சொத்துகள் குறித்து சரியான ஆவணங்களை தாக்கல் ெசய்யவில்லை. சொத்துகள் அனைத்தும் மஜீத்தின் வெளிநாட்டு வங்கி கணக்கிலிருந்தே வாங்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தது சரிதான். இந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று உத்தரவிட்டனர்.
The post கடத்தலில் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துகளை பறிமுதல் செய்தது சரிதான்: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.