ஆவணி மாத சோமவார சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில்

செய்யாறு, ஆக.20: செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ஆவணி மாத சோமவார பூஜை நேற்று இரவு நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் உள்ள பிரசித்தி பெற்ற பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் முதல் சோமவாரத்தில் (திங்கட்கிழமை) தல விருட்சமான பனை மரத்தடியில் வீற்றிருக்கும் சிவலிங்கம், திருஞானசம்பந்தர், பாலகுஜாம்பிகை சன்னதி எதிரில் உள்ள சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்துவது வழக்கம். அதன்படி, ஆவணி மாத முதல் சோமவாரத்தை ஒட்டி நேற்று இரவு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. மாதத்தில் முதல் சோமவார நாட்களில் பனை மரத்தடியில் வீற்றிருக்கும் ஈசனுக்கு பூஜை செய்து வழிபட்டால் திருமண வரம், தடையில்லா செல்வம் ஆகியவை கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி, நேற்று இரவு நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

The post ஆவணி மாத சோமவார சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் appeared first on Dinakaran.

Related Stories: