பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

பொன்னமராவதி,ஆக.17: பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் கட்டையாண்டிபட்டி பழனியப்பன் தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றிய செயலாளர் பக்ருதீன், சங்கத்தின் ஒன்றிய செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் பிச்சையம்மாள், சாத்தையா, எம்.ராமசாமி, லதா, பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொருளாளர் சண்முகம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நான்கு மாதங்களாக முழுமையாக வேலை வழங்காமல் கிராமப்புற ஏழைகளை துயரத்தில் தள்ளுவதை கைவிட்டு வேலை அட்டை பெற்றுள்ள அனைவருக்கும் முழுமையாக தொடர்ச்சியாக வேலை வழங்கிட வேண்டும்.

கட்டுமான பணிகளை திட்டத்தில் புகுத்தி திட்டத்தின் பயனாளிக்கு வழங்கப்படும். வேலைவாய்ப்பை தட்டி பறிப்பதை கைவிட வேண்டும், தினக்கூலி 319 முழுமையாக வழங்கிட வேண்டும். ஒன்றிய பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 2 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். வேலை நாட்களை 200 நாட்களாகவும், தினக்கூலியை 600 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

The post பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: