சீர்காழி அருகே திருவாலி ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 

சீர்காழி ஆக. 17: சீர்காழி அருகே திருவாலி ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே, திருவாலி கிராமத்தில் 132 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய ஏரிஉள்ளது. இந்த ஏரி 17 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஏரி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரால் முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் ஏரியிலிருந்து பாசனத்திற்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.

திருவாலி ஏரியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் திருவாலி புதுத்துறை, காரைமேடு, நெப்பத்தூர், தென்னம்பட்டினம், மாத்தாம்பட்டினம் மற்றும் கீழசட்டநாதபுரம் ஆகிய கிராமங்களுக்கு உட்பட்ட சுமார் 5049 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். திருவாலி ஏரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post சீர்காழி அருகே திருவாலி ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: