அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு

 

திருப்பூர், ஆக.17: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சுற்றுலா வளர்ச்சி மற்றும் சுற்றுலா தொழில் முனைவோர் ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள், தற்போது நடைபெற்று வரும் திட்ட பணிகள், தமிழ்நாடு அரசு சுற்றுலா கொள்கை, தமிழ்நாடு அரசு சுற்றுலா துறையில் மற்றும் சுற்றுலாத்துறை விருதுகள் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை குறித்து உரையாற்றினார். கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு சுற்றுலா தொழில் முனைவோர்கள் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

மேலும் உலக சுற்றுலா தினம் 2024 கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகளில் தொடர்பாக ஆய்வுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுற்றுலா தொழில் முனைவோர்கள் தங்கள் தொழிலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை மாவட்ட சுற்றுலா அலுவலரிடம் தெரிவித்தனர். இக்கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா சங்கங்களின், அறக்கட்டளைகளின் நிர்வாகிகள் நாகராஜ், குளோபல் பூபதி, சிக்கனா அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மோகன் குமார், உடுமலை அரசு கலைக்கல்லூரி சுற்றுலா பேராசிரியர் விஜய் ஆனந்த், தங்கும் விடுதிகளின் உரிமையாளர்கள் நிர்வாகிகள், சுற்றுலா ஆர்வலர்கள் பங்கேற்றனர்.

The post அம்மன் கோயில்களில் ஆடி கடைசி வெள்ளி வழிபாடு appeared first on Dinakaran.

Related Stories: