இதை தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியின் போது வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக நீதிபதிகள் சார்பில் ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்தை வழங்குவதாகா பொறுப்பு தலைமை நீதிபதி அறிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, டிஜிபி சங்கர்ஜிவால், சட்டம் ஒழுங்கு டிஜிபி டேவிட்சன் தேவ ஆசீர்வாதம், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோனகிருஷ்ணன், பெண் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் லூயிசாள் ரமேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக தமிழ்நாடு பார்கவுன்சிலில் நடந்த சுதந்திர தின நிகழ்ச்சியில் தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், இணை தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், உறுப்பினர் டி.செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பின்னர் 10.30 மணிக்கு உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள புனரமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலையை பொறுப்பு தலைமை நீதிபதி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.ஜெயச்சந்திரன், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், செயலாவர் ஆர்.கிருஷ்ணகுமார், வழக்கறிஞர்கள் அணுகுண்டு ஆறுமுகம், சீனிவாசராவ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
The post சென்னை உயர் நீதிமன்றத்தில் சுதந்திர தின விழா; பொறுப்பு தலைமை நீதிபதி கொடியேற்றினார்.! புனரமைக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கர் சிலை திறந்துவைப்பு appeared first on Dinakaran.