பூங்கா முருகன் கோயிலில் ரூ.7.37 லட்சம் காணிக்கை

மதுரை, ஆக. 15: மதுரை மாநகராட்சி ராஜாஜி பூங்கா அருகே பூங்கா முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்களை திறந்து காணிக்கை கணக்கிடும் பணிகள் ேமயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நேற்று நடைபெற்றது. உண்டியல் எண்ணும் பணிகளில் கோவில் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஈடுபட்டனர். உண்டியலில் ரூ.7 லட்சத்து 37 ஆயிரத்து 455 ரொக்கம், தங்கம் 28 கிராம், வெள்ளி 1 கிலோ 250 கிராம் பக்தர்களால் செலுத்தப்பட்டு இருந்தது. இந்நிகழ்வில் துணை மேயர் நாகராஜன், உதவி கமிஷனர் (வருவாய்) மாரியப்பன், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி, வருவாய் பிரிவு கண்காணிப்பாளர் கண்ணன், மேலாளர் குமரேசன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பூங்கா முருகன் கோயிலில் ரூ.7.37 லட்சம் காணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: