சுதந்திர தினவிழாவையொட்டி ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் ஓடும்

சென்னை, ஆக.15: சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல்மிகு நேரமான நண்பகல் 12 மணி முதல் 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில், காலை 5 மணி முதல் 12 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில், இரவு 8 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சுதந்திர தினவிழாவையொட்டி ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் ஓடும் appeared first on Dinakaran.

Related Stories: