பொன்னேரி: கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக மாணவரணி சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி காட்டுப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளருமான வழக்கறிஞர் சேதுராமன் ஏற்பாட்டில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, மீஞ்சூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ரமேஷ் ராஜ், மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜி.ரவி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வெற்றி, துணை அமைப்பாளர்கள் தமிழரசன், விக்னேஷ் உதயம், தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்தனர். 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்ற நிலையில், நேற்றுமுன்தினம் மாலை இறுதிப்போட்டி நடைபெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.20 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. தொடர்ந்து நினைவுப்பரிசாக கோப்பை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன், காட்டுப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் வினோதினி வினோத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.