நீலகிரியில் இருளர் பழங்குடியின மக்களிடம் கடன் வாங்கி தருவதாக மோசடி: சிக்கலில் இருந்து காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை

உதகை: நீலகிரியில் இருளர் பழங்குடியின மக்களிடம் கடன் வாங்கி தருவதாக கூறி அவர்கள் பெயரில் விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரியியிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மண்ணாரை கிராமத்தில் இருளர், பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடம் கோத்தகிரியை சேர்ந்த சாந்தி என்பவர் ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகளை பெற்று இவர்கள் பெயரில் கடன்வாங்கி விலை உயர்ந்த செல்போன்களை பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த கோரி பஜாஜ் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் தினமும் வந்து மிரட்டுவதாக இவர்கள் கூறுகின்றனர். மேலும் வாங்காத கடனை எப்படி திருப்பி செலுத்துவது என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஏமாற்றப்பட்ட இவர்கள் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க பயந்து தவித்து வருகின்றனர். தினக்கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தும் தங்களிடம் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களை இந்த சிக்கலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று அரசுக்கு பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post நீலகிரியில் இருளர் பழங்குடியின மக்களிடம் கடன் வாங்கி தருவதாக மோசடி: சிக்கலில் இருந்து காப்பாற்ற அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: