இந்நிலையில் தமிழகத்தில் பாடப் புத்தகங்களின் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. 1 முதல் 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 – 40 வரையும், 5 முதல் 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.30 – 50 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன. 8-ம் வகுப்பு புத்தகம் ரூ.40 – ரூ.70 வரையும், 9 – 12 வகுப்பு புத்தகங்கள் ரூ.50 – 80 வரையும் உயர்வு. ஒருசில புத்தகங்கள் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, 1-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.160 உயர்ந்து, ரூ.550-க்கு விற்பனையாகிறது. 2-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530-க்கு விற்பனையாகிறது.
3-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620-க்கு விற்பனையாகிறது. 4-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650-க்கு விற்பனையாகிறது. 5-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710-க்கு விற்பனையாகிறது. 6-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 7-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200 விற்பனையாகிறது.
8-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000 உயர்ந்துள்ளது. 9-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110க்கு விற்பனையாகிறது. 10-ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1,130க்கு விற்பனையாகிறது. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டணம் உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது.
காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை உயர்வு appeared first on Dinakaran.