நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

 

பூந்தமல்லி: சென்னை ஆயிரம்விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக இருந்த ரகு என்பவரின் மகள் சுரக்சாவை, அப்பகுதியைச் சேர்ந்த புகழேந்திக்கு சொந்தமான 2 ரேட்வீலர் நாய்கள் கடித்துக் குதறின. இதில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். சிறுமியை நாய் கடித்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்தநிலையில், தனது மகளுக்கு இழப்பீடாக ரூ.10 லட்சம் வழங்கக்கோரி அவரது தாய் சோனியா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தனி நபருக்கு சொந்தமான நாய் கடித்ததற்கு அரசை பொறுப்பாக்க முடியாது. எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: