இந்நிலையில் தற்போது கடந்த 44 நாட்களாக இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வரக்கூடிய நிலையில் இதுவரை 875 தொன்மையான பொருட்கள் அகழாய்வில் கிடைத்துள்ளது. இவை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுமார் 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கூறப்படும் புதுக்கோட்டையில் காவல் தெய்வமாக விளங்கும் பொற்பனைக்கோட்டை ஆதி முனீஸ்வரர் கோயில் ஆடி திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் இந்த கோயிலுக்கு வந்த பக்தர்கள் கோயிலுக்கு அருகே தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு இயக்குனர் தங்கதுரை தலைமையிலான குழுவினர் அரன்மனைதிடலில் நீராவி குளக்கரையில் அகழாய்வு செய்து வரும் பணிகளை, பார்வையிட்டு அகழ்வாராய்ச்சி மூலம் கிடைக்கப்பட்ட தொன்மையான பொருட்களை கண்டு வியப்படைந்தனர். அவர்களுக்கு தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சியும் அதிலிருந்து கிடைக்கப்பெற்ற பொருட்கள் குறித்து விளக்கமளித்து வருகின்றனர்.
The post பொற்பனைக்கோட்டை திருவிழா: அகழாய்வில் கண்டுபிடித்த 875 பொருட்களை பார்வையிட குவிந்த மக்கள் appeared first on Dinakaran.