தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஆக.12: விருதுநகர் அருகே ஆர்.ஆர் நகர் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணிமுஸ் தலைமையில், விருதுநகர் மறைவட்ட அதிபர் அருள் ராயன் முன்னிலையில் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், கடந்த 74 ஆண்டு காலமாக தலித் கிறிஸ்தவர்களுக்கு ஏனைய பட்டியல் இனத்தவர் எஸ்.சி இந்து, சீக்கியர், பவுத்தர்களுக்கு வழங்கப்படும் அரசு சலுகைகளை மீண்டும் வழங்க கோரியும், 1950ம் ஆண்டு ஜனாதிபதி பிறப்பித்த ஆணையில் மூன்றாம் பத்தியை நீக்கவும், நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தவும் தலித் கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தவர் எஸ்.சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசை வலியுறுத்தியும், தலித் கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தவர் எஸ்.சி அந்தஸ்து கிடைக்கும் வரை தற்காலிக நிவாரணமாக 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கருப்பு பேட்ஜ் அணிந்து கிறிஸ்தவர்களை மீண்டும் பட்டியல் இனத்தவர் எஸ். சி பட்டியலில் சேர்க்க கோரி மத்திய, மாநில, அரசுகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்பாக ஆலயம் முன்பு கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

The post தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி பட்டியலில் சேர்க்கக் கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: