பழநி அருகே ஒற்றை யானை ‘ஓவர்’ அட்டகாசம்: விவசாயிகள் கவலை

 

பழநி, ஆக. 12: பழநி அருகே சட்டப்பாறையில் ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில வருடங்களாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலனேதுமில்லை.

பழநி அருகே ஓட்டன்சத்திரம் வனச்சரகத்திற்குட்பட்ட சட்டப்பாறை கிராமத்தில் கரும்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் உணவு மற்றும் குடிநீர் இல்லாததால் காட்டுயானைக் கூட்டம் வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. இதன்படி பழநி அருகே சட்டப்பாறையில் உள்ள காளிமுத்து என்பவரது தோட்டத்திற்கும் புகுந்த ஒற்றை யானை நேற்று முன்தினம் தென்னை மரங்கள், கொய்யா மரங்கள் போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தி விட்டன. மேலும், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வைத்திருந்த பைப்லைன்களை உடைத்து சேதப்படுத்தியது.

The post பழநி அருகே ஒற்றை யானை ‘ஓவர்’ அட்டகாசம்: விவசாயிகள் கவலை appeared first on Dinakaran.

Related Stories: