பொன்னமராவதி,செப்.24: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் ஊராட்சி சின்னப்பிச்சம்பட்டியில் மிகவும் சேதமடைந்து காணப்படும் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை அகற்றிவிட்டு புதிய நீர்த்தேக்கத்தொட்டி அமைத்துத்தர பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆலவயல் ஊராட்சி சின்னப்பிச்சம்பட்டியில் சுமார் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி உள்ளது. இப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் இத்தொட்டி மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நீர்த்தேக்கத்தொட்டியின் கீழ் உள்ள நான்கு தூண்களும் மிகவும் சேதமடைந்து சிமெண்ட் பூச்சு அகன்று, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் எலும்பூக்கூடாய் காட்சியளிக்கிறது. குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படும் இந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை அகற்றிவிட்டு அதிக கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்க தொட்டியை அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
The post பொன்னமராவதி அருகே சின்னப்பிச்சம்பட்டி கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.